Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் இப்படி செய்ததாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் இப்படி செய்ததாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

By: Karunakaran Fri, 28 Aug 2020 1:42:44 PM

தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் இப்படி செய்ததாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

அமெரிக்க தேர்தல் நடைபெற இரண்டு மாதங்களே உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவைரஸ் விதிகளை கமலா ஹாரிஸ் மீறியதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மற்றும் மிட்சிகன் கவர்னர் கிரெட்சென் விட்மர், செனட்டர் கோரி பூக்கர் உள்ளிட்டோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மிக அருகில் நின்று கொண்டிருந்ததாக வைரல் புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

kamala harris,election campaign,viral,social media sites ,கமலா ஹாரிஸ், தேர்தல் பிரச்சாரம், வைரல், சமூக ஊடக தளங்கள்

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, வைரலாகும் புகைப்படம் மார்ச் 9 ஆம் தேதி எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள முக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகள் ஏப்ரல் மாத துவக்கத்தில் தான் அமலாக்கப்பட்டன.

அதன்படி, வைரல் பதிவுகளில் உள்ளது போன்று ஜனநாயக கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனாவைரஸ் விதிமுறைகளை மீறவில்லை என்பது உறுதியாகி விட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :
|