Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போரட்டத்தின் போது எடுக்கப்பட்டது என வைரலாகும் புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போரட்டத்தின் போது எடுக்கப்பட்டது என வைரலாகும் புகைப்படம்

By: Karunakaran Tue, 27 Oct 2020 12:56:12 PM

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போரட்டத்தின் போது எடுக்கப்பட்டது என வைரலாகும் புகைப்படம்

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளி கிழமை மாநிலம் முழுக்க மூன்று இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், சாலையில் Go Back Modi எனும் வாசகம் எழுதப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரல் பதிவுகளில் பீகார் பயர் மோடில் இருப்பதாக தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்த போது, அது கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

protest,prime minister,narendra modi,viral ,எதிர்ப்பு, பிரதமர், நரேந்திர மோடி, வைரல்

மேலும் இந்த புகைப்படம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது ஆகும். அதன்படி, வைரல் புகைப்படங்கள் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகி விட்டது. வைரல் புகைப்படத்திற்கும் சமீபத்திய பீகார் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படலாம். போலி செய்திகளை பரப்பாதீர்கள். பீகாரில் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :