மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலையை உருவாக்கிய புகைப்படங்கள்
By: Nagaraj Wed, 27 Sept 2023 07:24:33 AM
இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலை... மணிப்பூரில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இனக்குழுக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை அடக்க மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மணிப்பூரில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Tags :
again |
manipur |
status |
tension |