Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக ஆதரவு இல்லாவிட்டாலும் யாத்திரை தொடரும்; பாஜ தலைவர் முருகன் திட்டவட்டம்

அதிமுக ஆதரவு இல்லாவிட்டாலும் யாத்திரை தொடரும்; பாஜ தலைவர் முருகன் திட்டவட்டம்

By: Nagaraj Thu, 12 Nov 2020 09:15:44 AM

அதிமுக ஆதரவு இல்லாவிட்டாலும் யாத்திரை தொடரும்; பாஜ தலைவர் முருகன் திட்டவட்டம்

எங்கள் யாத்திரை தொடரும்... அதிமுக ஆதரவு தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி எங்கள் யாத்திரை தொடரும்" என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், நாங்கள் திட்டமிட்டபடி யாத்திரையை தொடர்கிறோம். அதிமுக ஆதரவு தந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எங்கள் யாத்திரை தொடர்ந்து நடைபெறும்.

யாத்திரைக்கு வருபவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் மக்களும், ஆன்மிக அன்பர்களும் ஆர்வமுடன் வந்து யாத்திரையில் பங்கேற்கின்றனர்.

bjp,aiadmk support,pilgrimage will continue,tamil language ,பாஜக, அதிமுக ஆதரவு, யாத்திரை தொடரும், தமிழ் மொழி

எங்கள் கட்சிக்கு என தனியாக ஒரு கொள்கை உள்ளது. அதேபோல, அதிமுக கட்சிக்கு என தனி கொள்கை உள்ளது. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. இந்து கடவுள்களை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். ஆனால், அவரது வேஷம் சிறிது நேரத்திலேயே கலைந்துவிட்டது. தமிழர்கள் பண்பாடு, உரிமை, தமிழ் மொழி ஆகியவற்றை தமிழக பா.ஜக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. அதுமட்டுமல்ல, உலகில் எந்த மூலையிலும் தமிழர் நலனுக்கு ஒரு தீங்கு என்றால், பாஜகதான் முதலில் குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|