Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் பயணிகள் 2 பேர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானத்தை பாதிவழியிலேயே திருப்பிய விமானிகள்

அமெரிக்காவில் பயணிகள் 2 பேர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானத்தை பாதிவழியிலேயே திருப்பிய விமானிகள்

By: Karunakaran Sun, 02 Aug 2020 4:03:50 PM

அமெரிக்காவில் பயணிகள் 2 பேர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானத்தை பாதிவழியிலேயே திருப்பிய விமானிகள்

உலகளவில் அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் தனியார் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் உறுதியான நடைமுறைகளை பின்பற்றி வருகிறது.

டெல்டா விமானத்தில் பயணம் செய்யும் போது, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றவேண்டும், விமானத்திலும்,விமான நிலையத்திலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிட்ரோய்ட் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகருக்கு கடந்த ஒரு டெல்டா விமானம் 23 ஆம் தேதி புறப்பட்டது.

pilots,plane,halfway,united states,masks ,விமானிகள், விமானம், பாதியிலேயே, அமெரிக்கா, மாஸ்க்

கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் மாஸ்க் அணிய விமான ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் 2 பேர் தாங்கள் மாஸ்க் அணியமாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீங்கள் மாஸ்க் அணிய வேண்டும் என விமான ஊழியர்கள் தெரிவித்தும் நீங்கள் மாஸ்க் அணிய வேண்டும் என விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்த விமானிகள், பாதிவழியிலேயே தனது பயணத்தை நிறுத்தி மீண்டும் புறப்பட்ட இடமான டிட்ரோய்ட் நகருக்கே விமானத்தை திருப்பி கொண்டு வந்தனர். டிட்ரோயாட் விமான நிலையத்தில் தரையிடக்கப்ப்பட்ட விமானத்தில் இருந்து அந்த 2 பயணிகளும் இறக்கப்பட்டனர். அதன்பின், டெல்டா விமானம் மீண்டும் அட்லான்டா நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. இதனை டெல்டா விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

Tags :
|
|