Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத்துகளை பூமிக்கு கொண்டு வர திட்டம்

பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத்துகளை பூமிக்கு கொண்டு வர திட்டம்

By: Nagaraj Sat, 26 Sept 2020 11:01:26 AM

பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத்துகளை பூமிக்கு கொண்டு வர திட்டம்

நாசா திட்டம்... பென்னு என்ற குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை பூமிக்கு எடுத்துவர திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து 334 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னு-வை ஆய்வு செய்வதற்கு நாசா ஏற்கனவே நைட்டிங்கேல் என்ற விண்கலத்தை அனுப்பியது.

pennu rock,dust,earth,nasa,planets ,பென்னு பாறை, தூசுகள், பூமி, நாசா, கிரகங்கள்

தற்போது பென்னுவைச் சுற்றி வரும் நைட்டிங்கேலை அதன் வடக்குப் பகுதியில் அடுத்த மாதம் 20ம் தேதியன்று தரையிறக்க நாசா முடிவு செய்துள்ளது.

விண்கலத்தில் உள்ள ஓஸிரிஸ் ரெக்ஸ் (OSIRIS-REx) என்ற இயந்திரக் கரங்கள் மூலம் பென்னுவின் பாறைகள் மற்றும் தூசுக்களை எடுத்து பூமிக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், கிரகங்கள் எவ்வாறு உருவாகின என்பது இதன்மூலம் தெரியவரும் எனவும் நாசா கூறியுள்ளது.

Tags :
|
|
|