Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம்... சி.வி. விக்னேஸ்வரன் வேதனை

தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம்... சி.வி. விக்னேஸ்வரன் வேதனை

By: Nagaraj Thu, 22 Oct 2020 8:41:46 PM

தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம்... சி.வி. விக்னேஸ்வரன் வேதனை

இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம்... தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20இன் பின்னால் இருக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதன் காரணமாக எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், “சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது. ஆகவே இந்த 20ஆவது திருத்தச் சட்டம் மூலமாக அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.

law amendment,human rights,partisanship,democracy ,சட்ட திருத்தம், மனித உரிமைகள், கட்சி வேறுபாடு, ஜனநாயகம்

ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எனவே யார் யார் எல்லாம் இந்த 20ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள் பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும். உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள். மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags :