Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தரையிறங்கியபோது விமானம் இரண்டாக உடைந்து விபத்து; 184 பயணிகள் நிலை என்ன?

தரையிறங்கியபோது விமானம் இரண்டாக உடைந்து விபத்து; 184 பயணிகள் நிலை என்ன?

By: Nagaraj Fri, 07 Aug 2020 9:59:35 PM

தரையிறங்கியபோது விமானம் இரண்டாக உடைந்து விபத்து; 184 பயணிகள் நிலை என்ன?

கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகளுடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துகி இரண்டாக உடைந்தது. விமானி பலியானார். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு ஏர் இந்தியா விமானம் (1X -1344) துபாயில் இருந்து 184 பயணிகளுடன் வந்தது. இந்த விமானம் இன்று இரவு 7.45 மணிக்கு கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது.

அப்போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.

plane crash,rescue operations,action,184 passengers ,விமான விபத்து, மீட்புப்பணிகள், நடவடிக்கை, 184 பயணிகள்

தரையில் மோதிய வேகத்தில் விமானம் இரண்டு துண்டாக உடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அப்பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மீட்புபணிகளுக்கான அனைத்துவித நடவடிக்கைகளை விரைந்து எடுக்கமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இந்த விமானத்தில் இருந்து பலரும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|