Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடுவானில் விமான பைலட் இறந்தததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது

நடுவானில் விமான பைலட் இறந்தததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது

By: Nagaraj Thu, 17 Aug 2023 6:26:45 PM

நடுவானில் விமான பைலட் இறந்தததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது

அமெரிக்கா: நடுவானில் பைலட் இறந்ததால் பரபரப்பு... அமெரிக்காவிலிருந்து சிலி நாட்டிற்குச் சென்ற விமானத்தில் நடுவானில் பைலட் இறந்ததால் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

லட்டம் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 271 பயணிகளுடன் மியாமியிலிருந்து சிலி நோக்கி கிளம்பியது. விமானம் புறப்பட்ட 3 மணி நேரத்தில் பைலட்டும், விமான கேப்டனுமான இவான் அண்டெளரின் ((Andaur)) உடல்நிலை நலிவடைந்தது.

mid-air,pilot,dead,landed,excitement ,நடுவானம், பைலட், இறந்ததார், தரையிறக்கப்பட்டது, பரபரப்பு

கழிவறையில் நிலைகுலைந்து விழுந்த இவானுக்கு பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் கோ-பைலட் உடனடியாக விமானத்தை பனாமா நாட்டில் தரையிறக்கினார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து இவான் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 56 வயதான இவான் 25 ஆண்டுகள் பைலட்டாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|