Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு... அவசரமாக தரையிறக்கப்பட்டது

பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு... அவசரமாக தரையிறக்கப்பட்டது

By: Nagaraj Tue, 24 Jan 2023 11:02:07 PM

பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு... அவசரமாக தரையிறக்கப்பட்டது

திருவனந்தபுரம்: மஸ்கட்டிற்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் கோளாறு இருப்பது தெரியவந்ததால் உடன் தரையிறக்கப்பட்டது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஓமான் தலைநகர் மஸ்கட்டிற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 105 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.விமானம் புறப்பட்டு பறக்க தொடங்கியதும் அதன் என்ஜினில் கோளாறு இருப்பது தெரியவந்தது. உடனடியாக விமானி இது பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்

aircraft,engine,fault,discovery,landed ,விமானம், என்ஜின், கோளாறு, கண்டுபிடிப்பு, தரையிறக்கப்பட்டது

இதையடுத்து விமானத்தை உடனே தரை இறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் அதாவது காலை 9.17 மணிக்கு மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது விமானத்தின் கம்யூட்டர் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.இதனால் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பத்திரமாக உள்ளனர், என்றனர்.

Tags :
|
|