Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு ... நேற்று முதல் அமல்

இந்த ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு ... நேற்று முதல் அமல்

By: vaithegi Fri, 04 Nov 2022 10:39:13 AM

இந்த ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு    ...   நேற்று முதல் அமல்

சென்னை: நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு .... பண்டிகை காலத்தையொட்டி, ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்தநிலையில், பண்டிகை காலம் முடிந்த நிலையில் அந்த 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

platform ticket fare,train , நடைமேடை டிக்கெட் கட்டணம்,ரெயில்

எனவே அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் ரூ.10 குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :