Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கழக ஆட்சி அமைய வேண்டும் என்பதே கொள்கை; மு.க. ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் கழக ஆட்சி அமைய வேண்டும் என்பதே கொள்கை; மு.க. ஸ்டாலின் பேச்சு

By: Monisha Sun, 20 Dec 2020 3:05:03 PM

தமிழகத்தில் கழக ஆட்சி அமைய வேண்டும் என்பதே கொள்கை; மு.க. ஸ்டாலின் பேச்சு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்.

கிராமசபை கூட்டங்கள் முடிந்தபிறகு நான் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளேன். 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். கொரோனா காலத்திலும் மக்களுக்காக செய்துள்ள பணிகளை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

assembly election,rule,victory,party,consultation ,சட்டசபை தேர்தல்,ஆட்சி,வெற்றி,கட்சி,ஆலோசனை

சட்டசபை தேர்தல் முன்கூட்டியே வரவுள்ளதாகவும் ஒரு தகவல் வருகிறது. தேர்தல் எப்போது வந்தாலும் சரி, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்ற வேண்டும். 200 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி தி.மு.க. வை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க வேண்டும். வரும் தேர்தலில் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். தி.முக. வெற்றி பெறும், ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்.

முக்கிய காலகட்டத்தில் இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தமிழகத்தில் கழக ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது கொள்கை. 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும், ஆனால் அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. தி.மு.க. வை தோற்கடிப்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர் என்று பேசினார்.

Tags :
|
|