Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது

By: vaithegi Sun, 21 Aug 2022 3:37:47 PM

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்படுவது வழக்கமாகும். எனவே இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டால் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

pollution control board,vinayagar chaturthi ,மாசு கட்டுப்பாடு வாரியம், விநாயகர் சதுர்த்தி

மேலும் அத்துடன் சிலைகளில் உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் உள்ளிட்டவைகளை ஆபரணமாக அலங்கரிக்க பயன்படுத்தலாம். சிலைகள் பளபளப்பாக இருக்க மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதையடுத்து நீர்நிலைகளை மாசுபடுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சிலைகளில் வண்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயத்தை பயன்படுத்தக்கூடாது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் கரைக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டவர்களை அணுகி கேட்டறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :