Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனது ஆறு வகை சாக்லெட்டுகளை திரும்ப பெற்ற பிரபல நிறுவனம்

தனது ஆறு வகை சாக்லெட்டுகளை திரும்ப பெற்ற பிரபல நிறுவனம்

By: Nagaraj Wed, 03 May 2023 8:10:53 PM

தனது ஆறு வகை சாக்லெட்டுகளை திரும்ப பெற்ற பிரபல நிறுவனம்

இங்கிலாந்து: 6 சாக்லெட் வகைகளை திரும்ப பெற்றது... பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 6 சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது.

லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா, அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொ ற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

chocolate,types,england fever,diseases,symptoms ,சாக்லெட், வகைகள், இங்கிலாந்து காய்ச்சல், நோய்கள், அறிகுறி

கேட்பரியின் தயாரிப்புகளில் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆறு சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. யார் வாங்கியிருந்தாலும் சாப்பிடாமல் வாங்கிய இடத்திலே ஒப்படைத்து மீண்டும் பணம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|