Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

By: Monisha Mon, 17 Aug 2020 4:52:34 PM

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் வரும் 19ம் தேதி (நாளை மறுநாள்) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் வடக்கு வங்கக் கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல் 19ம் தேதி வடக்கு வங்கக் கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

depression,meteorological center,bay of bengal,strong winds,fishermen ,காற்றழுத்த தாழ்வு பகுதி,வானிலை மையம்,வங்கக் கடல்,பலத்த காற்று,மீனவர்கள்

இன்று முதல் 19ம் தேதி வரை கர்நாடகா முதல் குஜராத் கடலோர பகுதி வரையிலும், 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இன்று இரவு 11.30 மணி வரை 2.5 மீட்டர் முதல் 3.1 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :