Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சச்சின் பைலட்டின் அதிகாரம் ராஜஸ்தான் அரசியலில் உயர்கிறது

சச்சின் பைலட்டின் அதிகாரம் ராஜஸ்தான் அரசியலில் உயர்கிறது

By: Nagaraj Mon, 17 Aug 2020 09:41:19 AM

சச்சின் பைலட்டின் அதிகாரம் ராஜஸ்தான் அரசியலில் உயர்கிறது

காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை... ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக மாநில காங்., பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, அவினாஷ் பாண்டே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை காங்., மேலிடம் நியமித்துள்ளது.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோரை சந்தித்து பேசியதையடுத்து, ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் நிகழ்ந்து வந்த மோதலில் திருப்பம் ஏற்பட்டது.

சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னையை விவாதிக்க 3 பேர் கொண்ட குழுவை நியமிக்க சோனியா முடிவு செய்தார். தொடர்ந்து 3 பேர் குழு ஒற்றுமைக்கு பின் ராஜஸ்தான் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற காங்., கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

sachin pilot,ajay mccann,congress up,report ,சச்சின் பைலட், அஜய் மாக்கன், காங்கிரஸ் மேலிடம், அறிக்கை

இந்நிலையில், சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னைகளை விவாதிக்க, காங்., மூத்த தலைவர்களான அகமது படேல், கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை காங்., மேலிடம் நியமித்துள்ளது. இவர்கள் ராஜஸ்தான் விவகாரங்களை ஆராய்ந்து காங்., மேலிடத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்., பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, அவினாஷ் பாண்டே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மூத்த காங்., தலைவர் அஜய் மாக்கன், ராஜஸ்தான் காங்., கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சச்சின் பைலட்டின் கை ஓங்குகிறது.

Tags :