Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயல்

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயல்

By: Karunakaran Thu, 29 Oct 2020 12:14:27 PM

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயல்

தெற்காசிய நாடுகளில் இந்தோனேசியாவுக்கு பிறகு பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இங்கு இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 180 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 7 ஆயிரத்து 114 பேரை பலிகொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ‘மோலேவ்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியது.

அந்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபார்ஷன், மிமரோபா, விசயாஸ் ஆகிய பிராந்தியங்களை இந்த புயல் புரட்டிப் போட்டுவிட்டது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தொடங்கி 160 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கின.

powerful storm,philippines,9 death,heavy rain ,சக்திவாய்ந்த புயல், பிலிப்பைன்ஸ், 9 மரணம், பலத்த மழை

புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்ததால், நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதேபோல் புயல் காரணமாக மின்வினியோகம் தடைபட்டு உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது. வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின.

இந்த புயல் காரணமாக ஏறத்தாழ 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மாயமாகியுள்ளதாகவும் நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல் வியட்நாம் வழியாக தென் சீனக் கடல் நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :