Advertisement

இன்று முதல் உடனே இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமுலானது

By: Nagaraj Mon, 17 Aug 2020 09:41:08 AM

இன்று முதல் உடனே இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமுலானது

விண்ணப்பித்த உடனே இ-பாஸ் கிடைக்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தவறான காரணங்களை கூறி இ-பாஸ் விண்ணப்பத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு தகுந்த காரணங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் உடனே வழங்கப்படும் என்ற அறிவித்தது.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலம் என்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தொடர்ந்து இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் அதை விண்ணப்பித்து பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இதில் பல்வேறு முறைகேடுகளும் நடந்தது.

e-pass,application,all,government of tamil nadu,strict action ,இ-பாஸ், விண்ணப்பித்தல், அனைவரும், தமிழக அரசு, கடும் நடவடிக்கை

இதனால் இன்று (17ம் தேதி) முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில் விண்ணப்பித்த உடனே இ-பாஸ் கிடைக்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தவறான காரணங்களை கூறி இ-பாஸ் விண்ணப்பத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
|
|