Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்திற்காக மத்திய அரசு செலுத்தும் பிரீமியம் தொகை குறைந்து வருகிறது

பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்திற்காக மத்திய அரசு செலுத்தும் பிரீமியம் தொகை குறைந்து வருகிறது

By: vaithegi Wed, 14 Dec 2022 2:27:53 PM

பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்திற்காக  மத்திய அரசு செலுத்தும் பிரீமியம் தொகை குறைந்து வருகிறது

இந்தியா: பீரிமியம் தொகையை குறைத்துவரும் மத்திய அரசு .... மழை, வெள்ளம், வறட்சி, போன்ற இயற்கை பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படும் போது, விவசாயிகளின் இழப்பை ஈடுகட்டுவதற்காக பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) என்கிற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியது.

இதையடுத்து இத்திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சுமார் 5.5 கோடி விவசாயிகள் பயிர்க் காப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது வரை சுமார் ரூ. 21,000 கோடி ரூபாய் பிரீமியம் வசூல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான காப்பீட்டுத் தொகையை வழங்கப்பட்டுள்ளது.

premium amount,crop insurance ,பிரீமியம் தொகை,பயிர்காப்பீடு

இதனை அடுத்து இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் 35.54 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பயிர் காப்பீடு செய்யப்பட்டன. தற்போது 2021-22ம் நடப்பு நிதியாண்டில் அது 40.74 லட்சம் ஏக்கராக அது உயர்ந்திருக்கிறது. நடப்பு பருவ ஆண்டில் இதுவரை மட்டும் 12.15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்திற்காக மத்திய அரசு செலுத்தும் பிரீமியம் தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் மாநில அரசு 75% பிரீமியம் செலுத்த வேண்டிய நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

Tags :