Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாலியில் ராணுவ கிளர்ச்சியாளர்கள் அதிபரை கைது செய்ததையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த அதிபர்

மாலியில் ராணுவ கிளர்ச்சியாளர்கள் அதிபரை கைது செய்ததையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த அதிபர்

By: Karunakaran Wed, 19 Aug 2020 4:44:44 PM

மாலியில் ராணுவ கிளர்ச்சியாளர்கள் அதிபரை கைது செய்ததையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த அதிபர்

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காதி என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ராணுவத் தளம் அருகே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றதாக தெரிகிறது. மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன.

இந்த சம்பவம் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான சதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக, ராணுவ வீரர்களிடம் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் உருவானதற்கு காரணமாக யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை. இந்நிலையில், மாலி நாட்டின் மந்திரிகள், சில ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

president,resign,military rebels,mali ,ஜனாதிபதி, ராஜினாமா, இராணுவ கிளர்ச்சியாளர்கள், மாலி

இந்நிலையில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர். மேலும் அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது மாலி அதிபர் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொலைக்காட்சியில் பேசுகையில், தனது தலைமையிலான ஆட்சியையும், பாராளுமன்றத்தையும் கலைப்பதாகவும், நான் அதிகாரத்தில் நீடிப்பதற்காக எந்த ரத்தமும் சிந்தக்கூடாது என்று விரும்புவதாகவும் தெரிவித்தார். சம்பள பிரச்சினை மற்றும் ஜிகாதிகளுடன் தொடர்ச்சியான மோதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராணுவ வீரர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|