Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மருந்து நிறுவன அதிபர்கள்

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மருந்து நிறுவன அதிபர்கள்

By: Karunakaran Fri, 25 Dec 2020 11:38:14 AM

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மருந்து நிறுவன அதிபர்கள்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் பெரும்பாலான நாடுகள் வறுமையில் சிக்கின.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பெரும் வல்லரசு நாடுகளை மீளமுடியாமல் தவித்து வருகின்றன. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்ட. அதற்கேற்ப கொரோனா மருந்து உருவாக்கப்பட்டு விட்டது. தற்போது கொரோனா மருந்து விநியோகிக்கும் செயல்முறை நடைபெற்று வருகிறது.

pharmaceutical company,super rich,corona vaccine,america ,மருந்து நிறுவனம், சூப்பர் பணக்காரர், கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா

அமெரிக்க வர்த்தக நிறுவனமான ‘போர்ப்ஸ்’, உலக அளவில் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில். இந்த ஆண்டு, சுகாதாரத்துறையில் புதிதாக பெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ள 50 புதுமுகங்களை அந்த பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் உலக அளவில் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் மருந்து நிறுவன அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்துள்ள அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா, ஜெர்மனி மருந்து நிறுவனமான பயோஎன்டெக் (பைசர் தடுப்பூசி) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் அடங்குவர். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால், பங்குச்சந்தையில் அந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்ததாலும், பெருமளவு முதலீடு அதிகரித்ததாலும் அவர்களின் வருவாய் உயர்ந்துள்ளதால் இந்த பட்டியலில் அவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Tags :