Advertisement

முட்டையின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது

By: vaithegi Sat, 16 July 2022 12:42:07 PM

முட்டையின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது

நாமக்கல் : ஆடி மாதத்தில் பல பண்டிகை தினங்கள் இருப்பதால் பலரும் அசைவம் உண்பதில்லை. அதனால், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முட்டையின் விலை தொடர்ந்து சரிவடைவது வழக்கம் ஆகும் . மேலும், இந்த ஆண்டு வட மாநிலங்களில் முட்டையின் விற்பனை சரிவு ஏற்பட்டதாலும் அதிகளவில் முட்டைகள் விற்கப்படாமல் அப்படியே இருப்பதால் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி கடந்த சில நாட்களாக முட்டையின் விலை தொடர்ந்து சரிவடைந்து கொண்டு வருகிறது.

கடந்த ஜூலை 9 ஆம் தேதியில் முட்டையின் விலை பண்ணை கொள்முதல் விலையில் 5 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின் படிப்படியாக முட்டையின் விலை சரிவடைந்து கொண்டே வந்தது.

egg,name stone ,முட்டை,நாமக்கல்

இதற்கு இடையே, நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் பண்ணை கொள்முதல் விலையில் முட்டையின் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 40 காசுகளுக்கு விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விலை குறைப்பு பற்றி பண்ணையாளர்களே விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் ஆடி மாதம் என்பதால் பல திருவிழாக்கள், விசேஷங்கள் வர இருக்கின்றன.

இதனால், யாரும் ஆடி மாதம் முழுமையாக முட்டையை பயன்படுத்துவதில்லை. இதனால், முட்டையின் விற்பனை வீழ்ச்சி அடைந்து அதிகளவு முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இந்த தேக்கமடைந்த முட்டைகளை விற்பனை செய்ய முட்டையின் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Tags :
|