Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் அதிகரிப்பு

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் அதிகரிப்பு

By: vaithegi Wed, 19 July 2023 3:51:28 PM

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் அதிகரிப்பு

சென்னை: மதுபானங்களின் விலை இன்று முதல் அதிகரிப்பு - டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிப்பு ... தமிழ்நாட்டில் 5329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் 500 கடைகள் மூடப்பட்டன. பூரண மதுவிலக்கை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரித்து வரும் நிலையில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்து உள்ளார்.

employees,tasmac stores ,ஊழியர்கள் , டாஸ்மாக் கடைகள்

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம்.

மேலும் குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்ந்துள்ளது. மதுபானங்களின் விலை அதிகரிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Tags :