Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்தது

By: vaithegi Sat, 01 Apr 2023 11:37:53 AM

வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்தது

சென்னை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொண்டு வருகின்றன.

இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

அந்தவகையில் இந்த மாதம் அதாவது (ஏப்ரல்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

gas,cooking gas ,கியாஸ் ,சமையல் எரிவாயு

இதனை அடுத்து கடந்த மாதம் ரூ. 50 அதிகரிக்கப்பட்டு ரூ. 1,118.50 ஆக நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது.

கடந்த மாதம்(மார்ச்) வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 223 அதிகரித்து, ரூ. 2,268க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) 76 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் ரூ. 2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|