Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பட்ஜெட் தாக்கல் எதிரொலியால் அதிரடியாக அதிகரித்த தங்கத்தின் விலை

பட்ஜெட் தாக்கல் எதிரொலியால் அதிரடியாக அதிகரித்த தங்கத்தின் விலை

By: vaithegi Wed, 01 Feb 2023 8:43:46 PM

பட்ஜெட் தாக்கல் எதிரொலியால் அதிரடியாக அதிகரித்த தங்கத்தின் விலை

இந்தியா: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு தங்கத்தின் விலை எதிர்பாரத அளவு அதிகரித்துள்ளது. இதற்கு மத்தியில் பொருளாதார மந்தநிலை மற்றும் இறக்குமதி வரி உயர்வு, பங்கு சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பிழப்பு போன்ற காரணங்களால் ஆபரணதங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்தது.

இதனை அடுத்து தற்போது ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 43,000க்கும் மேல் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 440 அதிகரித்துள்ளது.

budget,import ,பட்ஜெட் ,இறக்குமதி

இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 1 சவரன் ரூ. 43,320க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் ரூ. 55 உயர்ந்து 5,415 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

அதே போல வெள்ளி கிராம் ரூ.76 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 2023 – 2024ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தபடும் என அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக தற்போது தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

Tags :
|