Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பால் மற்றும் இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாக வாய்ப்பு

பால் மற்றும் இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாக வாய்ப்பு

By: vaithegi Wed, 05 Oct 2022 4:24:31 PM

பால் மற்றும் இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாக  வாய்ப்பு

சென்னை: பால் மற்றும் இறைச்சி விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ... நாட்டில் விலைவாசி உயர்வு என்பது சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து கொண்டு வருகிறது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலை உயர்வு சில சமயம் அரசின் கையை மீறி விடுகிறது.

கடந்த சில மாதங்களில் பெய்த கடும் மழை காரணமாக பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கான தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீவனங்களின் விலையானது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தினால் 25.54% ஆக அதிகரித்துள்ளது.

milk,meat,price ,பால் ,இறைச்சி,விலை

இதனையடுத்து கால்நடைகளுக்கான தீவனத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் திணறி கொண்டு வருகின்றனர். இதனை சமாளிப்பதற்காக விவசாயிகள் பால் மற்றும் இறைச்சி போன்றவற்றின் விலையை உயர்த்தி வருகின்றனர்.

மேலும் கால்நடைகளுக்கான தீவன விலையை பொறுத்த வரையில், எள்ளு புண்ணாக்கு தற்போது குவிண்டாலுக்கு ரூ.3,000 ஆகவும், கோதுமை வைக்கோல் குவிண்டாலுக்கு ரூ.2,000 ஆகவும், வைக்கோல் 1 கிலோ ரூ.16 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பால் மற்றும் இறைச்சியின் விலை மேலும் உயரும் சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது.

Tags :
|
|