Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி வரத்து உயர்வால் ... கோயம்பேடுட்டில் அதன் விலை கடும் வீழ்ச்சி

தக்காளி வரத்து உயர்வால் ... கோயம்பேடுட்டில் அதன் விலை கடும் வீழ்ச்சி

By: vaithegi Mon, 01 May 2023 10:40:43 AM

தக்காளி வரத்து உயர்வால்  ...  கோயம்பேடுட்டில் அதன் விலை கடும் வீழ்ச்சி

சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய சந்தையாக விளங்குகிறது.இதனை அடுத்து இங்கிருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

tomato,goyambadu ,தக்காளி ,கோயம்பேடு

அந்த வகையில் நேற்று 1 கிலோ தக்காளி, ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் விலை குறைந்து கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதேபோன்று, பல்லாரி வெங்காயம், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்பட சில காய்கறி வகைகளின் விலையும் குறைந்து இருக்கிறது.

Tags :
|