Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று சற்று குறைந்துள்ளது

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று சற்று குறைந்துள்ளது

By: vaithegi Fri, 21 July 2023 10:52:55 AM

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று சற்று குறைந்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை உச்சத்தைத் தொட்ட நிலையில் தற்போது இறக்குமதி உயர்ந்துள்ளது. எனவே இதன் காரணமாக தக்காளியின் விலை குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் சில்லறை வணிகத்தில் 1 கிலோ தக்காளி 180 வரை விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

உடனடியாக தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், நியாய விலை கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

tomato price,chennai coimbatore , தக்காளி விலை ,சென்னை கோயம்பேட்

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 1 நாள் 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில் 600 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வருகை புரிவதால் அதன் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தக்காளியின் விலை இன்று 10 ரூபாய் குறைந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதனை அடுத்து தக்காளி விலை சற்று குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதேசமயம் நியாய விலை மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :