Advertisement

ஒரு கிலோ தக்காளி விலை மீண்டும் 100 ரூபாயை தாண்டியது

By: vaithegi Wed, 26 July 2023 09:59:32 AM

ஒரு கிலோ தக்காளி விலை மீண்டும் 100 ரூபாயை தாண்டியது

சென்னை : மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை .... சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை மீண்டும் 100 ரூபாயை தாண்டி உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் 85 ரூபாய்க்கு விற்பனையான தக்காளியின் விலை நேற்று மீண்டும் 15 ரூபாய் அதிகரித்து ரூ.100ஐ எட்டியுள்ளது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 110க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.100க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.10 அதிகரித்து காணப்படுகிறது.

tomato,koyambedu market ,தக்காளி ,கோயம்பேடு சந்தை

இதனை அடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் கிலோ 22 ரூபாய்க்கும் , சின்ன வெங்காயம் கிலோ 140 ரூபாய்க்கும், உருளை ரூபாய் 30 ரூபாய்க்கும் , பீன்ஸ் ரூபாய் 80 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 50 க்கும் விற்பனை ஆகிறது.

அதேபோன்று இஞ்சி கிலோ 250 எட்டியுள்ள நிலையில், பூண்டு கிலோ 220 ஆகவும், வண்ண குடமிளகாய் 180 க்கும், பட்டாணி ரூபாய் 200க்கும், பச்சை குடைமிளகாய் ரூபாய் 70க்கும் விற்பனை ஆகிறது.

Tags :
|