Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்வு

By: vaithegi Thu, 01 June 2023 2:49:10 PM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்வு

சென்னை : வரத்து குறைவு ,தக்காளி விலை கிடுகிடு உயர்வு ..... கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய சந்தையாக விளங்குகிறது. இதையடுத்து இங்கிருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறி சப்ளை செய்யப்படுகிறது. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பலமாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவது, வரத்து குறையும் போது விலை உயர்வதும் வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில், தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கொண்டு வருகிறது.

tomato,koyambedu market,chennai ,தக்காளி ,சென்னை கோயம்பேடு மார்க்கெட்


கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்து 2 நாட்களாகவே தக்காளி விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தையில் தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வரி கத்திரிக்காய் தற்போது ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திடீர் வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளன.

Tags :
|