Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனை

By: vaithegi Fri, 09 Sept 2022 10:22:46 AM

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனை

சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இறுதி வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது.

இதை அடுத்து இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியதால் விலை திடீரென உயர்ந்தது.

chennai,tomato,sales ,சென்னை ,தக்காளி ,விற்பனை

கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாகவே தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

Tags :
|