முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பாதிரியார்
By: Nagaraj Sun, 18 Sept 2022 8:30:07 PM
சென்னை: முன்னாள் அமைச்சருக்கு கண்டனம்... ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ராஜா அவதூறாக பேசியதற்கு கிறிஸ்தவ பாதிரியார் பிஷப் காட்பிரே நோபிள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக எம்.பி.,யும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ராசா அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஹிந்துக்கள் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
"அதாவது ஹிந்துவாக நீ இருக்கிற வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கிற
வரை விபச்சாரியின் மகன் . ஹிந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன் எத்தனை
பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று
பேசியிருந்தார்.
இவரது சர்ச்சைக்குரிய இந்த
பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை
தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிஷப் காட்பிரே நோபிள்
கூறியுள்ளார்.