Advertisement

அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர்

By: vaithegi Tue, 20 June 2023 09:58:49 AM

அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர்

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில்ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் வணிக தலைவர்களை சந்திக்கவும், இந்திய சமூகத்துடன் கலந்துரையாடவும், பல துறை சார்ந்த சிந்தனை தலைவர்களை சந்திக்கவும் தனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து அங்கு ஐநா சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் வாஷிங்டனுக்கு செல்லும் அவர் அதிபர் ஜோபைடன் தம்பதியரை நாளை இரவு வெள்ளை மாளிகையில் சந்தித்து சிறப்பு இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.

prime minister,united states of america ,பிரதமர்,அமெரிக்கா

இதனை ஆடுது அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தாவது, நான் அமெரிக்காவுக்கு புறப்படுகிறேன். நியூயார்க் நகரம் மற்றும் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் கலந்து கொள்ள இருக்கிறேன்,

ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தினம் கொண்டாட்டங்கள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடனான பேச்சு, அமெரிக்க நாடாளுமன்ற கூட்ட தொடரில் உரை போன்ற வற்றை நிகழ்த்த இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் வருகிற ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்கு செல்லவுள்ளார் பிரதமர் மோடி.

Tags :