Advertisement

உடல்நிலை பாதித்து ஐவரி கோஸ்ட்ரின் பிரதமர் காலமானார்

By: Nagaraj Thu, 09 July 2020 11:14:23 AM

உடல்நிலை பாதித்து ஐவரி கோஸ்ட்ரின் பிரதமர் காலமானார்

ஆப்பிரிக்க நாடான ஐவரி ஐவரி கோஸ்ட்ரின் (Ivory Coast) பிரதமர் அமடோ கோன் கூலிபாலி (Amadou Gon Coulibaly) தனது 61ஆவது வயதில் காலமானார்.

பிரான்ஸில் இரண்டு மாதங்களாக இதய சிகச்சைக்காக அவர் சென்று நாடு திரும்பிய நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அமடோ கோன் கூலிபாலி வரும் அக்டோபரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். ஐவரி கோஸ்ட்டின் தற்போதைய ஜனாதிபதி அலசேன் ஓட்டாரா (Alassane Ouattara) மூன்றாவது முறையாக பதவியில் இருக்கப் போவதில்லை என்று கூறியதையடுத்து கோன் கூலிபாலி சிகிச்சையை முடித்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக பிரான்சில் இருந்து திரும்பி வந்துள்ளார்.

ivory kostrin,pm,passed away,notification,cardiac therapy ,ஐவரி கோஸ்ட்ரின், பிரதமர், காலமானார், அறிவிப்பு, இதய சிகிச்சை

கோன் கூலிபாலி, 2012ஆம் ஆண்டில் இதய மாற்று அறுவைச் சிகிச்சையைப் பெற்ற நிலையில் மற்றுமொரு சிகிச்சைக்காக இவ்வருடம் மே 2ஆம் திகதி பரிஸுக்குச் சென்ற அவர் கடந்த வியாழக்கிழமை நாட்டுக்குத் திரும்பியிருந்தார்.

இதன்போது, “எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கும் பணியைத் தொடர நான் ஜனாதிபதியின் பக்கத்திலேயே திரும்பி வருகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி எங்களை விட்டு விலகியிருப்பதை நான் மக்களுக்கு அறிவிக்கிறேன் எனவும் அவரது இழப்பினால் நாடு பெரும் துக்கத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ஓட்டாரா தெரிவித்துள்ளார்.

Tags :
|