Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது விருந்தில் விதிமுறை மீறியதற்காக வருத்தம் தெரிவித்தார் பெல்ஜியம் இளவரசர்

பொது விருந்தில் விதிமுறை மீறியதற்காக வருத்தம் தெரிவித்தார் பெல்ஜியம் இளவரசர்

By: Nagaraj Mon, 01 June 2020 6:59:35 PM

பொது விருந்தில் விதிமுறை மீறியதற்காக வருத்தம் தெரிவித்தார் பெல்ஜியம் இளவரசர்

ஸ்பெயினில் முடக்க நிலையின்போது விருந்தில் கலந்து கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெல்ஜிய இளவரசர், மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற 28 வயதான இளவரசர் ஜோச்சிம், இரண்டு நாட்களுக்குப் பிறகு தெற்கு நகரமான கோர்டோபாவில் ஒரு விருந்துக்குச் சென்றார். இந்த விருந்தில் விருந்தில் 27 பேர் கலந்துக் கொண்டனர். ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்படி 15 பேர்தான் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அங்கு விதிமுறை மீறப்பட்டது.

belgium,prince,pardon,violation of norm,corona ,பெல்ஜியம், இளவரசர், மன்னிப்பு, விதிமுறை மீறல், கொரோனா

இதனிடையே, இந்த விருந்தில் கலந்து கொண்ட நிலையில் இளவரசர் ஜோசிம்முக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிமுறையை மீறிய செயலுக்கு தான் மிகவும் வருந்துவதாக இளவரசர் ஜோச்சிம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘எனது பயணத்தின் போது அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் மதிக்காததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த கடினமான காலங்களில் நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை’ என கூறினார்.

27பேர் கலந்துக் கொண்ட இந்த விருந்தில், பெல்ஜியத்தின் மன்னர் பிலிப்பின் மருமகனும் கலந்துக் கொண்டதாக ஸ்பெயின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Tags :
|
|