Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 512 கிலோ வெங்காயம் விற்றதற்கு ரூ.2.49 தான் லாபம்... அதிர்ச்சியில் விவசாயி

512 கிலோ வெங்காயம் விற்றதற்கு ரூ.2.49 தான் லாபம்... அதிர்ச்சியில் விவசாயி

By: Nagaraj Sat, 25 Feb 2023 7:29:05 PM

512 கிலோ வெங்காயம் விற்றதற்கு ரூ.2.49 தான் லாபம்... அதிர்ச்சியில் விவசாயி

மகாராஷ்டிரா: லாபம் இரண்டரை ரூபாய்தான்... மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த விவசாயிக்கு வெறும் ரூ.2.49 மட்டுமே லாபமாகக் கிடைத்துள்ளது என்பது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சோலாப்பூர் மாவட்டம், பார்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர சவான்(63). இவர் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டிருந்தார். ஆனால், தற்போது வெங்காயத்துக்கு போதுமான அளவு விலையில்லை. இந்நிலையில் தனது நிலத்தில் பயிரிட்ட வெங்காயத்தை அறுவடை செய்து, சோலாப்பூர் சந்தைக்கு விற்பனைக்கு ராஜேந்திரா கொண்டு சென்றார்.

ஆனால், அங்கு சென்ற ராஜேந்திராவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே எடுப்போம் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். 512 கிலோ வெங்காயத்தை 10 சாக்குகளில் அடைத்து, போக்குவரத்து செலவு செய்து, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி கொடுத்து அனைத்து செலவுகளும் சேர்த்து ரூ.509 ஆனது. ஆனால், வெங்காயம் ரூ.512.க்கு விலைபோனது. இதனால் விவசாயி ராஜேந்திரா தனக்கு நிகர லாபமாக ரூ.2.49 மட்டுமே கிடைத்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

caribbean,farmers survive,government,transported, ,ரூ.2.49 காசு, 512 கிலோ, லாபம், விவசாயி, வெங்காயம்

இது குறித்து ராஜேந்திரா சவான் கூறுகையில் “ என்னுடைய நிலத்தில் விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்து 512 கிலோவை 10 சாக்குகளில் சோலாப்பூர் சந்தைக்கு கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு சென்றேன். குவிண்டால் 100 ரூபாய்க்கு எடுப்பதாகத் தெரிவித்தனர். எனக்கு போக்குவரத்து செலவு, ஏற்று, இறக்குக் கூலி என மொத்தம் ரூ.509.51 பைசா செலவானது.

இறுதியாக 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்தமைக்கு எனக்கு ரூ.2.49 காசு நிகர லாபமாகக் கிடைத்தது. 512 கிலோ வெங்காயத்தை அறுவடை செய்த எனக்கு கிடைத்த லாபம் என்பது, எனக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கே அவமானம். வெங்காயம் விளைச்சல் நன்றாக இருக்கிறது, ஆனால், மொத்தசந்தையில் விலை குறைவைாக இருக்கிறது எனத் தெரிவித்தார்

Tags :