Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 71 எம்.பிக்களின் சொத்து மதிப்பு எகிறோ எகிறின்னு உயர்ந்திடுச்சு

71 எம்.பிக்களின் சொத்து மதிப்பு எகிறோ எகிறின்னு உயர்ந்திடுச்சு

By: Nagaraj Sun, 05 Feb 2023 9:24:40 PM

71 எம்.பிக்களின் சொத்து மதிப்பு எகிறோ எகிறின்னு உயர்ந்திடுச்சு

புதுடில்லி: எம்.பிக்கள் சொத்து அதிகரிப்பு... கடந்த 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்களவைக்கு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் 71 பேரின் சொத்துகள் சராசரியாக 286 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி என்ற பா.ஜ.க. எம்.பி.தான். முதலிடத்தில் உள்ளார். இத்தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்.) தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ரூ.1.18 கோடியாக இருந்த ஜிகாஜினாகியின் சொத்துமதிப்பு 2014 இல் ரூ.8.94 கோடியாக அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் இவரது சொத்துமதிப்பு ரூ.50.41 கோடி. என்ன மலைப்பாக இருக்கிறதா? அதாவது இவரது சொத்து மதிப்பு 4,189 சதவீதம் அதிகரித்துள்ளதாம். தேர்தலின்போது இவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டில் இவர் 6 வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பிஜாபூர்தான் இவரது தொகுதி. 2016 ஜூலை முதல் 2019 ஆம் ஆண்டு மே வரை இவர் முந்தைய மோடி அரசில் மத்திய அரசில் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை துணை அமைச்சராக இருந்துள்ளார்.

report,percentage,mps,asset value,average,rise ,அறிக்கை, சதவீதம், எம்.பி.க்கள், சொத்து மதிப்பு, சராசரி, உயர்ந்துள்ளது

கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான பி.சி. மோகன், இந்த பட்டியலில் முதல் 10 பேரில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியிலிருந்து மீண்டும் (2019ல்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.சி.மோகன், 2009 ஆம் ஆண்டு தேர்தலில் தமக்கு ரூ.5.37 கோடி சொத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் இவரது சொத்துமதிப்பு அதிரடியாக ரூ. 75.55 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இவரது சொத்து 1,306 சதவீதம் அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியிலிருந்து கடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பா.ஜ.க. எம்.பி.யான வருண் காந்தியின் சொத்து கடந்த 2009 ஆம் ஆண்டில் ரூ.4.92 கோடியாக இருந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு ரூ.60.32 கோடியாக உயர்ந்துள்ளது.

சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்தவரும், பதிண்டா தொகுதி எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கெளர் பாதலின் சொத்து மதிப்பு 2009 ஆம் ஆண்டு ரூ.60.31 கோடியாக இருந்தது 2019 இல் ரூ.217.99 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது சொத்து மதிப்பு 261 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநிலம் பாரமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சதானந்த் சுலேவின் சொத்து மதிப்பு 2009 ஆம் ஆண்டு ரூ.51.53 கோடியாக இருந்தது ரூ.89.35 கோடியாகவும் பின்னர் 2019 ஆம் ஆண்டு ரூ.140.88 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

2009 ஆம் ஆண்டில் சுயேச்சைகள் உள்ளிட்ட 71 எம்.பி.க்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.6.15 கோடிதான். இவர்களின் சொத்து மதிப்பு 2009 ஆம் ஆண்டிலிருந்து 2019-க்குள் சராசரியாக ரூ.17.59 கோடி உயர்ந்துள்ளது. அதாவது 286 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|