Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் வலிமை என்னவென்று இலங்கை அரசுக்கு நிரூபித்த போராட்டக்காரர்கள்

மக்கள் வலிமை என்னவென்று இலங்கை அரசுக்கு நிரூபித்த போராட்டக்காரர்கள்

By: Nagaraj Sun, 10 July 2022 8:55:28 PM

மக்கள் வலிமை என்னவென்று இலங்கை அரசுக்கு நிரூபித்த போராட்டக்காரர்கள்

இலங்கை; போராட்டக்காரர்களை தாக்கிய பாதுகாப்பு படையினர்... பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மக்கள் புரட்சி உச்சத்தை அடைந்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் மோசமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.


ஏற்கனவே ஒருமுறை மக்கள் புரட்சி தீவிரமடைந்த போது மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ஆனால் அவரது பதவியும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தற்போது வரை பெட்ரோல் தட்டுப்பாடு, விலை உயர்வு பிரச்னைகளில் இருந்து மீளாத இலங்கை மக்கள் மீண்டும் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியை ராஜினாமா செய்தார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அதிபர் மாளிகைக்குள் பொதுமக்கள் பேரணியாக நுழைந்தனர். தடுப்புகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக மாளிகைக்குள் நுழையும் காட்சிகள் உலக நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்களை தடுப்பதற்காக ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், மக்களை கட்டுப்படுத்த முடியாமலும் தோல்வியடைந்தனர். பாதுகாப்புக்காக இலங்கை அதிபர், மாளிகையில் இருந்து தப்பியோடினார்.

protesters,defense force,assault,honesty,appreciation ,
போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படை, தாக்குதல், நேர்மை, பாராட்டுக்கள்

இலங்கை அதிபர் தப்பியோடியது மற்றும் அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது அதிபரின் மாளிகை இலங்கை மக்களின் கைவசம் இருக்கிறது. ஹோம் டூர் வீடியோ போல் ஏராளமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.


மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அங்கு இருக்கும் நீச்சல் குளத்தில் உற்சாகமாக விளையாடினர். மக்கள் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடும் காட்சிகளும் வெளியாகின. இதுமட்டுமில்லாமல் மாளிகையில் உள்ள சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டனர். பொருளாதார நெருக்கடி உள்ள சூழலில்கூட அதிபர் வீட்டில் உணவுப் பொருட்கள் குவிந்து கிடப்பதாக போராட்டக்காரர்கள் விமர்சனமும் செய்தனர்.

அதேபோல் மாளிகையின் படுக்கையறையில் படுத்துக் கொண்டு செல்ஃபிக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். வீட்டிற்குள் ஜாலியாக படுத்துக் கொண்டு, அதிபர் மாளிகைக்குள் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வருகின்றனர்.

அதிபர் மாளிகையில் இருக்கும் இருக்கையில் பெண் ஒருவர் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது. மக்கள் வலிமை என்னவென்று இலங்கை அரசுக்கு நிரூபித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிபரின் வீட்டில் கைப்பற்றிய பணக்கட்டுகளை போராட்டக்காரர்கள் பொறுப்பாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். எவ்வளவு பணம் இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. நேர்மையுடன் நடந்து கொண்டு பணத்தை பத்திரமாக ஒப்படைத்த போராட்டக்காரர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் கடுமையாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :