Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் புதுச்சேரி கடல்... குவியும் சுற்றுலாப்பயணிகள்

சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் புதுச்சேரி கடல்... குவியும் சுற்றுலாப்பயணிகள்

By: Nagaraj Tue, 17 Oct 2023 5:18:37 PM

சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் புதுச்சேரி கடல்... குவியும் சுற்றுலாப்பயணிகள்

புதுச்சேரி: சிவப்பு நிறத்தில் கடலலை... புதுச்சேரியில் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் கடலலை, ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வீடியோ எடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி கடல் பகுதி கடந்த இரண்டு தினங்களாக சீற்றத்துடனும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.

puducherry,public,excitement,color red,prohibition ,புதுச்சேரி, பொதுமக்கள், பரபரப்பு, சிவப்பு நிறம், தடை விதிப்பு

இந்த செய்தி புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவியதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் கடலில் சிவப்பாக உள்ள பகுதிகளை விடியோவாக பதிவு செய்தும், கடல் முன்பு நின்று செல்பி எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேலும், கடலில் இறங்கி நிற்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்களை கண்காணிக்க காவல் துறையினர் கடற்கரையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் திடீரென்று கடல் பகுதி சிவப்பு நிறமாக மாறி காட்சியளிக்கும் சம்பவம் புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|