Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சிலை கரைப்பு .. சில பாதையில் சண்டே மார்க்கெட் கடைகள் செயல்படக் கூடாது என புதுவை நகராட்சி ஆணையர் உத்தரவு

விநாயகர் சிலை கரைப்பு .. சில பாதையில் சண்டே மார்க்கெட் கடைகள் செயல்படக் கூடாது என புதுவை நகராட்சி ஆணையர் உத்தரவு

By: vaithegi Sat, 03 Sept 2022 1:27:17 PM

விநாயகர் சிலை கரைப்பு  ..  சில  பாதையில் சண்டே மார்க்கெட் கடைகள் செயல்படக் கூடாது என புதுவை நகராட்சி ஆணையர் உத்தரவு

இந்தியா: இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பானா முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதை அடுத்து எப்போதும் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிலைகள் வைக்கப்பட்டு 3-ம் நாள் அல்லது 5-ம் நாள் அன்று சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அதன்படி புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து சென்று வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கரைக்கப்பட உள்ளது. ,

market shop,ganesha idol , மார்க்கெட் கடை,விநாயகர் சிலை

ஊர்வலமானது நேரு வீதி, காந்தி வீதி, அஜாந்தா சந்திப்பு, பட்டேல் சாலை வழியாக ஊர்வலம் நடைபெற உள்ளது. அதனால் விநாயகர் சிலை அப்பாதையில் பாதையில் சண்டே மார்க்கெட் கடைகள் செயல்படக் கூடாது என்று புதுவை நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதுதாவது :போக்குவரத்து இடையூறு இன்றி இருக்க மகாத்மா காந்தி வீதியில் அஜந்தா சிக்னலில் இருந்து நேரு வீதி சந்திப்பு வரை உள்ள சண்டே மார்க்கெட் கடைகள் அனைத்தும் செயல்படக்கூடாது. மேற்கண்ட பகுதிகளில் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று வியாபாரம் நடத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக சிலைகளை கடல் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வசதியாக மண் கொட்டி சாய்தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகின்றது.

Tags :