Advertisement

முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது

By: vaithegi Sun, 23 July 2023 3:19:31 PM

முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து அதன்படி 4.45 ரூபாயாக இருந்த முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு 4.20 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோழி இறைச்சி விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கறிக்கோழி கிலோ ரூ.86க்கும், முட்டை கோழி கிலோ ரூ.77க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

egg,namakkal ,முட்டை ,நாமக்கல்

தமிழகத்தில் ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே வெகுவாக குறைந்து உள்ளது. எனவே முட்டை விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கோழி இறைச்சி விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும் கடந்த 4 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.17 குறைந்து உள்ளதால் வியாபாரிகள் பெரிதும் கவலையடைந்து உள்ளனர்.

Tags :
|