Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிறந்த குழந்தையின் தாயை தேட பயணிகளை விமானத்திலிருந்து இறக்கியதற்கு கத்தார் அரசு மன்னிப்பு

பிறந்த குழந்தையின் தாயை தேட பயணிகளை விமானத்திலிருந்து இறக்கியதற்கு கத்தார் அரசு மன்னிப்பு

By: Karunakaran Thu, 29 Oct 2020 12:16:01 PM

பிறந்த குழந்தையின் தாயை தேட பயணிகளை விமானத்திலிருந்து இறக்கியதற்கு கத்தார் அரசு மன்னிப்பு

கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 2-ந் தேதி விமான நிலையத்தின் கழிவறையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் அந்த குழந்தையின் தாயை உடனடியாகக் கண்டுபிடிக்க, விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதனால் யாருக்கேனும் குழந்தை பிரசவித்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை கண்டறிய முனைந்தனர். இதற்காக, ஆஸ்திரேலியா செல்லவிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பெண் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி கட்டாய உடல் பரிசோதனை நடத்தினர். அக்டோபர் 2 ம் தேதி மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானத்தில் உள்ள அனைத்து பெண்களையும் இறங்கச் செய்தனர்.

qatari government,apologize,passengers,newborn baby ,கத்தார் அரசு, மன்னிப்பு, பயணிகள், பிறந்த குழந்தை

இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுபோன்ற பரிசோதனை, பாலியல் வன்கொடுமைக்கு இணையானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும் குழந்தையைப் பெற்றெடுத்த தாயைக் கண்டறிந்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக கத்தார் அரசு விளக்கம் அளித்துள்ளது. கத்தார் நாட்டில் குழந்தை பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதாக எச்ஐஏ உறுதிப்படுத்தியது, மேலும் மருத்துவ வல்லுநர்கள் அந்த குழந்தையின் தாயின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அதிகாரிகளுக்கு கவலை தெரிவித்தனர்,

Tags :