Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • க்வாட் கூட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய களமாக உருவாகியுள்ளது

க்வாட் கூட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய களமாக உருவாகியுள்ளது

By: Nagaraj Wed, 07 Sept 2022 08:18:09 AM

க்வாட் கூட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய களமாக உருவாகியுள்ளது

புதுடெல்லி: மத்திய அமைச்சர் தகவல்... பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய களமாக 'க்வாட்' கூட்டமைப்பு உருவாகியுள்ளது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஆஸ்திரேலியா-இந்தியா தலைமைத்துவ உரையாடல் 2022 என்ற கருத்தரங்கில் அவா் காணொலி வழியாக பங்கேற்று பேசியதாவது: இந்திய மாணவா்கள் கல்வி கற்கும் பிரதான இடமாக ஆஸ்திரேலியா உள்ளது. அந்நாட்டில் உள்ள இந்தியா்களின் எண்ணிக்கை 7.2 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது இருநாட்டு சமூகங்களின் பலமாக உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியாவின் அரசியல் மற்றும் திட்டமிடலில் கூா்மையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, வளம் மற்றும் பாதுகாப்பு மீதான அக்கறையே இருநாடுகளுக்கு இடையிலான பிணைப்பு அதிகரிப்பதற்கு பெரிதும் காரணமாக உள்ளது.

சமீபத்திய சா்வதேச நிகழ்வுகள் உலகளாவிய ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. உலகளாவிய விநியோக நடவடிக்கைகள் குறித்து கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இது முன்பிருந்த நிலைக்குத் திரும்பும் திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து நியாயமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.


அதேவேளையில், மேன்மேலும் டிஜிட்டல்மயமாகி வரும் உலகம் தரவுகள் குறித்த நம்பகத்தன்மைக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தக் களங்களில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வலுவான ஈடுபாட்டை கொண்டுள்ளன.

students,australia,change,india,britain,developing ,மாணவர்கள், ஆஸ்திரேலியா, மாற்றம், இந்தியா, பிரிட்டன், வளரும்

இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பால் இந்தியா-பசிபிக் பிராந்தியம் பலனடையும். முன்னேற்றம், வளம், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய களமாக க்வாட் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு) உருவாகியுள்ளது.

கடினமான காலங்களிலும் கூட்டாக செயல்படுவது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் புதிதல்ல. முதலாம் உலகப் போரின்போது துருக்கி நாட்டின் கலிபொலி பகுதியில் நடைபெற்ற சண்டையில்கூட இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஓரணியில் இடம்பெற்றிருந்தன. இருநாடுகளும் ஆழமான நட்புறவை பேணி வருகின்றன என்றாா் அவா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் டிரஸுக்கு எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தாா். லிஸ் டிரஸ் தலைமையின் கீழ் இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவு மேன்மேலும் வளரும் என்று நம்புவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

Tags :
|
|