Advertisement

பாகிஸ்தானில் அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம்

By: vaithegi Wed, 22 June 2022 08:10:47 AM

பாகிஸ்தானில் அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில்அதிகாலை (புதன்) சுமார் 2.24 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி உள்ளது.

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.

earthquake,richter scale,pakistan ,நிலநடுக்கம்,
ரிக்டர் அளவு,பாகிஸ்தான்

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இந்நிலநடுக்கத்தால் எவ்வளவு உயிர் சேதம் மட்டும் பொருள் சேதம் ஏதேனும் உள்ளதா என்று தேடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே நேற்று நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :