Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை .. பல முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது

தீபாவளி பண்டிகை .. பல முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது

By: vaithegi Sat, 08 Oct 2022 12:32:57 PM

தீபாவளி பண்டிகை  ..   பல முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது

சென்னை: கூடுதல் சிறப்பு ரயில் ... தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால், அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கும் வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள்.நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி வர உள்ளது. இதற்காக பல முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அதன்படி மைசூர் -துாத்துக்குடி சிறப்பு கட்டண ரயிலானது (06253) தீபாவளியை ஒட்டி மைசூரில் இருந்து அக்டோபர் 21ம் தேதி மதியம் 12:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:00 மணிக்கு துாத்துக்குடி வந்து சேரும். இதே தடத்தில், துாத்துக்குடியில் (06254) இருந்து மைசூருக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 22ம் தேதி மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலானது யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை கடந்து செல்லும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

special train,diwali festival ,சிறப்பு ரயில்,தீபாவளி பண்டிகை

இதேபோன்று யஷ்வந்த்பூர் – திருநெல்வேலி இடையிலான சிறப்பு ரயிலனானது (06565) யஷ்வந்த்பூரில் இருந்து இருந்து அக்டோபர் 18 மற்றும் 25ம் தேதி மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். மேலும், திருநெல்வேலியில் இருந்து ரயில் (06566) யஷ்வந்த்பூருக்கு அக்டோபர் 19 மற்றும் 26 ம் தேதி இரவு 11:30 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலானது பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி போன்ற ரயில் நிலையங்களின் வெளியே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :