Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முறையான சோதனையின்றி சிக்னலை இயக்குவதாக ரயில்வே வாரியம் அதிருப்தி

முறையான சோதனையின்றி சிக்னலை இயக்குவதாக ரயில்வே வாரியம் அதிருப்தி

By: Nagaraj Fri, 16 June 2023 8:39:48 PM

முறையான சோதனையின்றி சிக்னலை இயக்குவதாக ரயில்வே வாரியம் அதிருப்தி

புதுடெல்லி: பராமரிப்பு பணி முடிந்து சிக்னல் ஊழியர்கள் முறையான சோதனையின்றி சிக்னலை இயக்குவதாக ரயில்வே வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள பாகனாகா பஜாரில் கடந்த 2ம் தேதி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட 3 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்து நாட்டையே உலுக்கியது.

இதுவரை 288 பேரை பலிகொண்ட இந்த தொடர் விபத்துகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பராமரிப்பு பணி முடிந்து சிக்னல் ஊழியர்கள் முறையான சோதனையின்றி சிக்னலை இயக்குவதாக ரயில்வே வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

board,dissatisfaction,method,railway,signal,test , அதிருப்தி, சிக்னல், சோதனை, முறை, ரயில்வே, வாரியம்

இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வேறு ரயில்வே மண்டலங்களில் பராமரிப்பு பணி முடிந்து முறையான சோதனையின்றி சிக்னல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற 5 சம்பவங்கள் நடந்துள்ளன.

சரியான சோதனைகளை செய்யாமல் சிக்னல் தரக்கூடாது என பலமுறை சிக்னல் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற சம்பவம் இன்னும் தொடர்கிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|