Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது

By: vaithegi Thu, 25 May 2023 10:10:11 AM

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மே 8-ஆம் தேதி தொடங்கியது. மே 8-ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையானது கடந்த 22 - ஆம் தேதியுடன் முடிவு பெற்றது. சுமார் 164 அரசு கலைக்கல்லூர்களில் 1 லட்சத்து 7,395 இடங்களுக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே கல்லூரிகளிலும், ஆன்லைன் மூலமாகவும் மாணவர்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம் .

rank list,government college of arts and sciences ,தரவரிசை பட்டியல்,அரசு கலை அறிவியல் கல்லூரி

இதையடுத்து தரவரிசை பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 9ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும் , அடுத்த மாதம் 12 முதல் 20-ஆம் தேதி வரை 2-ம் கட்ட பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளது.

கலந்தாய்வு முடிவடைந்த பின்னர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும். முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22- ஆம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags :