Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் 10ஆம் தேதி ரபேல் போர் விமான இணைப்பு விழா நடைபெற உள்ளது

செப்டம்பர் 10ஆம் தேதி ரபேல் போர் விமான இணைப்பு விழா நடைபெற உள்ளது

By: Karunakaran Fri, 28 Aug 2020 6:06:27 PM

செப்டம்பர் 10ஆம் தேதி ரபேல் போர் விமான இணைப்பு விழா நடைபெற உள்ளது

பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்திய விமானப்படைக்கு கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் இவை வாங்கப்படுகின்றன. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பது தாக்குதல் ரகத்தை போன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்த ஒப்பந்தபடி, பிரான்ஸ் முதல் கட்டமாக ஐந்து விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது. கடந்த ஜூலை 29-ல் இந்த விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

raphael war,air liaison ceremony,september,france ,ரபேல் போர், ஏர் தொடர்பு விழா, செப்டம்பர், பிரான்ஸ்

தற்போது, ரபேல் போர் விமானம் முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் விழா வரும் 10ஆம் தேதி, ஹரியானா மாநிலம் அப்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரபேல் போர் விமான இணைப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றார். இந்த விழாவில் பங்கேற்க பிரான்ஸ் ராணுவத்துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :