Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘சூப்பர் ப்ளூ மூன்’ அரிய நிகழ்வு நேற்று இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழ்ந்தது

‘சூப்பர் ப்ளூ மூன்’ அரிய நிகழ்வு நேற்று இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழ்ந்தது

By: vaithegi Thu, 31 Aug 2023 10:45:15 AM

‘சூப்பர் ப்ளூ மூன்’ அரிய நிகழ்வு நேற்று இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழ்ந்தது


சென்னை: பூமியின் துணைக்கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. எனவே அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும்.

ஆனால், மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு தோன்றும் போது, 2-வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்.

super blue moon,chennai ,சூப்பர் ப்ளூ மூன்,சென்னை

அந்தவகையில் ப்ளூ மூன் நிகழ்வு நேற்று நடந்தது. மேலும் அதனுடன், புவிக்கு மிக அருகில் நிலவு வந்ததால், அதை சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு என்றும் அழைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் முழு நிலவை முழுமையாக காணமுடியாமல் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தின் 1-ம் தேதியிலும் பவுர்ணமி தென்பட்டது. தொடர்ந்து 2-வது முழு நிலவு நாளான நேற்று புளூ மூன் நிகழ்வு நடந்தது. இதற்குமுன் 2018, 2020 அக்டோபர் 21-ம் தேதியிலும் புளூ மூன் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :