Advertisement

‘தளபதி 68’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியீடு

By: vaithegi Wed, 29 Nov 2023 4:09:41 PM

‘தளபதி 68’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியீடு

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜய் ராஜ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ், வைபவ், விடிவி கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், ஜெயராம், மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து கொண்டு வருகிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தாய்லாந்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு படப்பிடிப்பு முடிந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

release date,commander 68 ,ரிலீஸ் தேதி,தளபதி 68

இதன் இடையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தளபதி 68 திரைப்படத்தை படக்குழு அடுத்த ஆண்டு 2024 அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தீபாவளிக்கு அடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம்.

படத்திற்கான படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் போது அதனுடன் சேர்த்து அறிவித்து சர்ப்ரைஸ் கொடுக்கவும் திட்டமிடபட்டு இருக்கிறதாம்.

Tags :